» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜேசிஐ பியர்ல்சிட்டி சார்பில் பொங்கல் சங்கம விழா
வியாழன் 9, ஜனவரி 2025 10:09:12 AM (IST)
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டியின் பொங்கல் சங்கம விழா விவிடி பிரம்மஜோதி தோட்டத்தில் வைத்து நடைப்பெற்றது.
விழாவிற்கு பியர்ல் சிட்டி பில்டர்ஸின் உரிமையாளர் ரமேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவ்விழாவில் ஜேசிஐ-யின் மண்டலம் 18 டின் தலைவர் சரவண குமாரின் கனவு திட்டமான, மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு, மடிக்கணினி ஒரு பெண் பயனாளிக்கு வழங்கப்பட்டது.
விழாவில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பொன் விழா ஆண்டின் தலைவர் வே. பொன்ராஜா பரிசுகள் வழங்கினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் வி.பாலகிருஷ்ணன், சி.வில்சன் அமிர்தராஜ், ஆர்.ஸ்ரீதரன், எம்.ஜெயபால் ஆலிவர், ஜே.ஆல்ட்ரின் மிராண்டா, ஜேஏசி மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், கிளை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர் ஜனார்த்தனன் ஒருங்கிணைத்தார்.