» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் பொங்கல் விழா!
வியாழன் 9, ஜனவரி 2025 8:16:46 PM (IST)
தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இணைந்து மண்பானையில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். இதைத் தொடர்ந்து ஆண் பெண் வழக்கறிஞர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், கோலப்போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு துணைத் தலைவர் தெய்வ தொல்காப்பியன் செயலாளர் செல்வின் இணைச்செயலாளர் ஜஸ்டின் பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.