» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜான் ஜீகன் முதியோர் இல்லம் பொன்விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வியாழன் 9, ஜனவரி 2025 4:31:21 PM (IST)
தூத்துக்குடியில் ஜான் ஜீகன் முதியோர் இல்லத்தின் 50வது ஆண்டு பொன்விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தூத்துக்குடி மாநகரின் எட்டையாபுரம் ரோட்டில் லிட்டில் சிஸ்டர்ஸ் ஆஃப் பூவர்ஸ் என்ற அமைப்பினரால் நடத்தப்படும் ஜான் ஜீகன் முதியோர் இல்லத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், ஹாட்லி மச்சாது, மைக்கேல் மோத்தா, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ், மருத்துவர் ரிச்சர்ட், இல்லத்தின் பொறுப்பாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.