» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பு மேலும் அதிகரிப்பு: பக்தர்கள் அவதி!!

வியாழன் 9, ஜனவரி 2025 8:00:06 AM (IST)



திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கரடுமுரடான பாறைகளில் நின்று புனித நீராடுவதால் பக்தர்கள் காயம் அடைகின்றனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மார்கழி மாதத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் திருச்செந்தூருக்கு வந்து வழிபடுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் புனித நீராடும் பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் கோவில் அருகில் மேலும் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கரடுமுரடான வெண்ணிற பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே அப்பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

பாறைகளில் நின்று புனித நீராடுவதால் பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனினும் சிலர் ஆபத்தை உணராமல் பாறைகளில் நின்று செல்பி எடுக்கின்றனர். சிறுவர்கள் ஓடி விளையாடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவில் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory