» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு கேபிள் டிவிக்கு 50 இலட்சம் எச்டி செட்டாப் பாக்ஸ்கள்: உள்ளூர் ஆபரேட்டர்களுக்கு அழைப்பு!

புதன் 8, ஜனவரி 2025 4:58:24 PM (IST)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 இலட்சம் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூபாய் 140 + GST என்கிற குறைந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி சேவைகளை பொது மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது. உயர் வரையறை (HD - High Definition) செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 50 இலட்சம் உயர் வரையறை (HD - High Definition) செட்டாப்பாக்ஸ்களை விநியோகிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக இரண்டு இலட்சம் HD செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, சந்தாதாரர்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேவைக்கேற்றவாறு HD செட்டாப் பாக்ஸ்கள் வழங்குவதற்குப் போதுமான செட்டாப் பாக்ஸ்கள் கையிருப்பில் உள்ளன.  HD செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் HD செட்டாப் பாக்ஸ்களை பெற்றுப் பயனடையுமாறு அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்று, செயலிழக்க நிலையில் (Inactive LCOs) உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி HD செட்டாப் பாக்ஸ்களைச் செயலாக்கம் செய்யவும், தவறும் பட்சத்தில் அப்பகுதியில் புதிய உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நிறைவான சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டராக பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tactv.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory