» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு உத்தரவு : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 8, ஜனவரி 2025 3:22:49 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டூராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மதுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் மேயர் பேசியதாவது "மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் நீங்கள் பிளாஸ்டிக் பை, குப்பைகளை பக்கிள் ஓடைகளில் போடாதீர்கள். இதனால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். 

16, 17, 18 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி 90% முடிந்துவிட்டது. மீதமுள்ள  10% பணிகள் விரைவில் முடிக்கப்படும். ரோடுகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது இதுவரை 50 மாடுகள் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கால்நடைகள் ரோடுகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார் 

முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சந்தனராஜ் செயலாளர் கசின் ஆகியோர் மேயரிடம் அளித்த மனுவில் "தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக அங்கு ஏடிஎம் அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் பேசி வருகிறோம் விரைவில் ஏடிஎம் திறக்க ஏற்பாடு செய்கிறோம் என்று மேயர் தெரிவித்தார். 

முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் ரங்கநாதன், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கனகராஜ், ராமர் ,விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர், பகுதி செயலாளர் பிரபாகரன் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



முன்னதாக இம்முகாமில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று மேயரிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக காசிலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், செல்வம், ரஃபிக் உள்ளிட்டோர் மனு அளித்தனர். 


மக்கள் கருத்து

MAKKALJan 8, 2025 - 03:50:58 PM | Posted IP 162.1*****

SIVAJOTHI NAGAR, KATHIRVEL NAGER PAGUTHIKKU KUPPAI VANDI VAARAM ORU MURAI MATTUMEY VARUGIRATHU. APPO ENGO POI KUPPAIYAI MAKKAL KOTTUVAARGAL.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory