» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டட ஓப்பந்தகாரரிடம் ரூ.4லட்சம் திருட்டு: போலீஸ் விசாரணை
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:52:56 PM (IST)
சாத்தான்குளம் அருகே கட்டிட ஓப்பந்தகாரரிடம் ரூ.4 லட்சம் பணம் திருடியதாக ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி ஜோசப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மரியகுருசு மகன் செல்வன் (43). கட்டட ஓப்பந்தகாரனான இவர் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கி இருந்து அங்குள்ள நாகபெருமாள் சுவாமி கோயிலில் கட்டட பணிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.
இவர் ஆன்லைனில் வேலைவாய்ப்பு விளம்பரம் செய்ததில் மகேஷ் என்பவர் அறிமுகமாகி இவருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். செல்வன், வீட்டில் வைத்திருந்த பையில் ரூ.4 லட்சம் பணம் வைத்துள்ளார். 3ஆம் தேதி பையை பார்த்தபோது அந்த பணத்தையும், அவருடன் இருந்த மகேஷையும் காணவில்லை.
மகேஷை , செல்வன் சகோதரர் சகாய ஜோசப்ராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து செல்வன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நாககுமாரி வழக்கு பதிந்து தலைமறைவான மகேஷை தேடி வருகிறார்.