» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல் : ஓட்டுநர் கைது!
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:49:49 PM (IST)
சாத்தான்குளம் அருகே ஓடையில் மணல் கடத்த முயன்றதாக லாரியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டுரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்ட பகுதியில் உள்ள ஓடை, ஆறுகளில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக தகவலின் பேரில் சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் கொண்ட வருவாய்த்துறையினர் இன்று வாகன தணிக்கை சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது சுப்பராயபுரம் ஓடை பகுதியில் இருந்து மணல் அள்ள முயன்ற டிப்பர் லாரியை மறித்து சோதனை நடத்தினர். இதனையடுத்து மணல் கடத்த முயன்றதாக லாரியை பறிமுதல் செய்து சாத்தான்குளம் போலீசில் ஓப்படைத்தனர். இதனையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நாககுமாரி வழக்கு பதிந்து லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான சாத்தான்குளம் காந்திநகர் அந்தோணி மகன் கண்ணன் (31) என்பவரை கைது செய்தனர்.