» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஜன.7ல் ஆர்ப்பாட்டம் : அமைச்சர்கள் கீதாஜீவன் - அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

திங்கள் 6, ஜனவரி 2025 5:40:51 PM (IST)

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானபடுத்தும் ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் வருகிற 7ஆம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன், மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை : தமிழக ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். அதன் உச்சக்கட்டமாக சட்டப்பேரவையில் காலகாலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவிடாமல் அவமானப்படுத்தியுள்ளார். 

ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை மடைமாற்றவும்மான வித்தைகளைச் செய்யும் அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணியை கண்டித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து 07.01.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தலைமைக் கழகத்தின் அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 07.01.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி பாளைரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்திட வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் .ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

சொந்த சிந்தனை இல்லைJan 7, 2025 - 11:43:40 AM | Posted IP 172.7*****

டலைவர் எதை செய்ய சொல்கிறாரோ அதை தான் பின்பற்றி வாழும் ஜென்மங்கள்

சங்கர்Jan 7, 2025 - 04:26:18 AM | Posted IP 162.1*****

ஜாமீனில் வெளியே இருக்கும் டுபாக்கூர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory