» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் 4வது பதவியேற்பு விழா
சனி 4, ஜனவரி 2025 5:11:47 PM (IST)
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸின் 4வது பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஹைடெக் பியூட்டி பார்லர் உரிமையாளர் ஜேஎஃப்எம் ஆர். அஜிதா பிரபு புதிய தலைவராக பொறுப்பேற்றார். முதன்மை விருந்தினராக வின்ஸ்டன் ஏஜென்சிஸ் உரிமையாளர் தியோனிஸ் பீரிஸ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மண்டலத்தலைவர் சரவணகுமார் (மண்டலம் XVIII) கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களான டாக்டர் ராஜ்குமார் (பிளாஸ்டிக் சர்ஜன்), மற்றும் மண்டல துணைத் தலைவர் சாம் ஆகியோர் புதிய தலைவரை வாழ்த்தி பேசினர். புதிய தலைவர் ஆர்.அஜிதா பிரபுவுக்கு பதவி பிரமாணம் உடனடி முன்னாள் தலைவர் செய்து வைத்தார். பொறுப்பேற்ற பிறகு, புதிய தலைவர் தனது ஏற்புறையில் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, இவ்வாண்டுக்கான "She Rise Up" என்ற கருப்பொருளை அறிமுகப்படுத்தினார்.
விழாவில், ஹைடெக் பியூட்டி பார்லரின் முன்பாக ஒரு குளிர்சாதன பெட்டி வைத்து, தேவையானவர்களுக்கு மதிய உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு பயனாளிகளுக்கு புதிய லேப்டாப் அளிக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற நாசாவில் ஒரு போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு விருது வழங்கப்பட்டது. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாக சிறு கூடுகள் வழங்க பெற்றது. மேலும் அவற்றை பூங்காக்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது. மேலும் பெண்கள் ஹாக்கி போட்டியை முன்னிறுத்தும் விதமாக போஸ்டர் வெளியிடப்பட்டது.