» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாண்டியபுரம் ரயில்வே கேட் நாளை மூடல் : தெற்கு ரயில்வே தகவல்!
சனி 4, ஜனவரி 2025 4:48:59 PM (IST)
அவசரகால பராமரிப்பு பணிகளுக்காக பாண்டியபுரம் ரயில்வே கேட் நாளை (ஜன.5)மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி - ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ள பாண்டியபுரம் ரயில்வே கேட் அவசரகால பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜன.5) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.