» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமறையூர் ஆலயத்தில் குருமார்க்கு வரவேற்பு
வியாழன் 2, ஜனவரி 2025 5:29:13 PM (IST)
நாசரேத் அருகே திருமறையூர் மறுரூப ஆலயத்தில்பணி செய்யும் ஊழியர்களுக்கு சபை மக்கள் சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பணி செய்யும் ஊழியர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சபை மக்கள் சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. சபை ஊழியர் ஸ்டேன்லி ஜான்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்து துவக்கினார். சபை மூப்பர் ஞானராஜ் வரவேற்று பேசினார்.
இதில் குருவானவர் ஜான் சாமுவேல். கோல்டா சாமுவேல் சபை ஊழியர் ஸ்டான்லி டீக்கன் ஜெபி ஆலய பணியாளர் ஆபிரகாம் ஆர்கினிஸ்ட் ஜோயல். ஆலய பாடகர் குழுவினர் ஆகியோருக்கு சதை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால். மற்றும் தேவதாஸ் அகஸ்டின், ஜீவன் ஜான் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சேகர குரு ஜான் சாமுவேல் ஏற்புரை நிகழ்த்தி ஆசீர்வாதம் வழங்கி நிறைவு செய்தார்.