» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் : ஆட்சியர் தகவல்!!

வியாழன் 2, ஜனவரி 2025 4:15:24 PM (IST)



தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 / விஏஓ தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC Group- IV தேர்வுக்கான அறிவிக்கை 2025-ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.

இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச நேரடிபயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 02.01.2025 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநர்களை கொண்டு ஸ்மார்ட் போர்டு வைத்து நடத்தப்படும். மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் 0461-2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. TNPSC Group- IV தேர்வுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ArunachalaperumalJan 3, 2025 - 10:51:11 PM | Posted IP 172.7*****

Naan katru kolla virumpukiren

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory