» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை

வியாழன் 2, ஜனவரி 2025 4:02:07 PM (IST)



நாசரேத் பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாசரேத் பகுதிகளில் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினர். நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் புத்தாண்டு ஆராதனை மற்றும் சிறப்பு திருவிருந்து ஆராதனை தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் உதவிகுரு. பொன்செல்வின் அசோக்குமார் முன்னிலையில் நடந்தது. ஆலயம் வண்ண பூக்களின் அலங்காரங்கள், இந்த புத்தாண்டு ஆராதனையில் சபை மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் நடைபெற்ற புத்தாண்டு ஆராதனையில் தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பார்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான எட்வின் பிரபாகர் தலைமை தாங்கி புத்தாண்டு தேவசெய்தி வழங்கினார். ஊழியர் டேவிட் மெர்வின் பிரபாகர் சிறப்பு துதி ஆராதனையை நடத்தினார். இதையடுத்து புத்தாண்டின் ஆசீர்வாதத்திற்காக விசேஷ பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டது. 

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையிலும், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகர தலைவர் நவராஜ் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி முன்னிலையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகர தலைவர் ஞானசிங் எட்வின் தலைமையில் சபை ஊழியர் ஜெனோ செல்வக்குமார் முன்னிலையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சேகர குரு ஞானசிங் தலைமையில் சபை ஊழியர் ஜான் வில்சன் முன்னிலையிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. 

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமையிலும், அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலயத்தில் சேகர தலைவர் பாஸ்கரன் தலைமையிலும், நாலுமாவடி தூய யோவான் ஆலயத்தில் சேகரகுரு. ஆபிரகாம் ரஞ்சித் தலைமையிலும், கடையனோடை பரிசுத்த தோமா ஆலயத்தில் சேகர தலைவர் ஆசீர் சாமுவேல் தலைமையிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. நாசரேத் சுற்றியுள்ள வகுத்தான்குப்பம், ஒய்யான்குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, வாழையடி, பிள்ளையன்மனை, ஆசீர்வாதபுரம், மணிநகர், வெள்ளமடம், தைலாபுரம் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. 

ஆராதனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இப் புத்தாண்டின் சிறப்பம்சமாக நாசரேத் பஸ் நிலையம் அருகே மோட்டார் சங்கம் சார்பிலும், நாசரேத் 5வது தெரு மற்றும் சந்தி பஜாரில் இளைஞர்கள் சார்பிலும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோபுரங்கள், வானவேடிக்கைகள் என நாசரேத் நகரமே ஜொலித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory