» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கம் : நகராட்சி அறிவிப்பு
வியாழன் 2, ஜனவரி 2025 3:48:21 PM (IST)
கோவில்பட்டியில் நாளை (ஜன.03) முதல் அனைத்து பேருந்துகளும், கூடுதல் பஸ் நிலையத்தில் இயக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சி அண்ணா பழையபேருந்து நிலையம், பேருந்து ஒடுதளம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக பேருந்துகள் இடம் மாற்றி நிறுத்துவதற்காக ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டத்தில் கீழ் கண்ட துறை சார்த்த அலுவலர் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பின் வரும் விபரத்தின் படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
1. அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. அண்ணா பேருந்து நிலையம் முன்பு பயணிகளை இறக்குவதற்கும் மற்றும் ஏற்றுவதற்கும் மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. இளையரசனேந்தல் ரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் EMAR மெயின் ரோடு வழியாக மாதாங்கோவில் ரோடு வழியாக தூத்துக்குடி விளாத்திக்குளம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் EMAR மெயின் ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. கழுகுமலை, சங்கரன்கோவில், திருநெல்வேலி, தென்காசி நெடுங்குளம் செல்லும் பேருந்துகளும் நகருக்குள் வந்து இளையரசனேந்தல் ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. தூத்துக்குடி விளாத்திகுளத்தில் இருந்து வரும் பேருந்துகள் பார்க் ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு மணியாச்சி பாலம் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
6. மினி பேருந்துகளில் சுப்பையா தேவர் மிட்டாய் கடை முன்புறமும் மீதம் உள்ள பேருந்துகள் மேற்கு பேருந்து நிலையத்தில் நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
நாராயணன்Jan 4, 2025 - 07:39:09 AM | Posted IP 162.1*****
கோவில்பட்டி. நன்றி
சங்கர் டேணிJan 3, 2025 - 02:59:12 PM | Posted IP 162.1*****
பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர், இந்த நடவடிக்கையால் நேரமும் பணமும் விரையமாகும்.அதைத்தவிர வேறெதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.
SivaJan 3, 2025 - 11:07:04 AM | Posted IP 172.7*****
மேலே சொன்னது நடைமுறை படுத்தவில்லை, அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயங்குகின்றன
Alagarsamy 7305645626Jan 3, 2025 - 08:38:48 AM | Posted IP 172.7*****
Respected kovilpatti administrative department,kindly try to implement the following steps in trail basis.
1.All buses towards, Rly stn, GH, Ettaiyapuram ROAD to start and end from New bustand.Mini Buses TERMINUS in old bustand to be removed and alternative multiple locations. Kindly share the administration mail id for the detailed proposal. Thanks.
NarayananJan 4, 2025 - 07:39:36 AM | Posted IP 162.1*****