» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மூலம் 75,028 மாணவியர் பயன்பெறுவார்கள் : அமைச்சர் கீதா ஜீவன்

சனி 28, டிசம்பர் 2024 9:47:43 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்க உள்ள புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் டிச.29 மற்றும் 30 தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (29ஆம் தேதி) மதியம் 11.50 மணிக்கு வருகை தர உள்ளார். தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சுமார் 32 கோடியை 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட மினி டைட்டில் பார்க்கை திறந்து வைத்து மினி டைட்டில் பார்க்கை பார்வையிடுகிறார். 

தொடர்ந்து மாலை 5:30 மணி அளவில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெறும் வடக்கு தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.  தொடர்ந்து 30ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை தமிழகத்தில் ஒரு ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

இந்த விழா நடைபெறுவதற்காக காமராஜர் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை அமைக்கும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்த பந்தலில் அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் பார்வையாளர் அமர்வதற்கான இடங்களையும் பார்வையிட்டு அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.‌ 

தொடர்ந்து மினி டைட்டில் பார்க் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரியிடம் கேட்டு அறிந்து பார்வையிட்டார்.‌ ஆய்வின் போது சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளை திறக்கப்படும் டைட்டில் பார்க் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றது. 

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசும் போது; பெண்கள் அனைவரும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் உன்னத திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது 

அது மட்டும் இன்றி தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ஆம் தேதி தூத்துக்குடியில் வைத்து தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory