» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் : முதல்வர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் கோரிக்கை!

ஞாயிறு 29, டிசம்பர் 2024 7:26:34 PM (IST)

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர்.

தூத்துக்குடி 45வது வார்டு சிவந்தாகுளம் 1 மற்றும் 5வது தெரு பகுதி மக்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கொள்கைவழி சிறப்பான ஆட்சி நடத்திவரும் தமிழக அரசு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு சிவந்தாகுளம் 5வது தெருவில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடை எண்.10147 மக்கள் குடியிருப்புகளுக்குள்ளும், சிறுபான்மை பெந்தேகோஸ்தே சபைக்கும் அருகில் உள்ளதால் பொதுமக்கள் தினந்தோறும் அச்சத்தில் செல்கின்றனர். 

கால்டுவெல் காலனி, லெவிஞ்சிபுரம் ஆகிய தெருக்கள் இணைக்கும் 5வது தெருவில் மறைமுகமான இடத்தில் இக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை அருகில் உள்ள வீட்டில் 24 மணி நேரமும் மறைமுகமாக வைத்து மது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு காலிமனைகள் அதிகம் இருப்பதால் வீட்டின் முன்பு வைத்து காலை முதல் இரவு வரை மது அருந்துதலும், சிறுநீர் கழிப்பதுமாக உள்ளது. மேலும் போதை தலைக்கேறியவர்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் வண்டிகளை மறித்து பணம் கேட்பதும், அவ்வழியே செல்லும் பெண்களிடமும் தவறாக பேசுவதும் அவர்கள் பயத்தோடு செல்லுவதுமாக உள்ளது. 

அருகில் வீடுகளின் கதவை தட்டி பணம் கேட்பதுமாக உள்ளது.  இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டுவிட்டு வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதனிடையே கோஷ்டி மோதலும் உள்ளது. இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் பல புகார்கள் உள்ளன. இதுசம்பந்தமாக பலமுறை பலதுறைகளிடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது ஆட்சியின் மீது பற்றும், ஆதரவும் உள்ள இப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம் என் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

என்னதுDec 29, 2024 - 07:50:29 PM | Posted IP 172.7*****

சாராய ஆலைய கம்பெனி ஓனரிடம் கோரிக்கையா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory