» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடற்கரையில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு!

புதன் 1, ஜனவரி 2025 12:45:07 PM (IST)

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி அம்பிகா (46), கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் இறந்துவிட்டார். அம்பிகா தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்த அம்பிகா, அன்று இரவு கடற்கரையில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இருந்தார். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory