» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!
சனி 4, ஜனவரி 2025 11:01:08 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 22 மூட்டைகள் பீடி இலைகள், 10 மூட்டை கட்டிங் பீடி இலைகள், 8 மூடை பீடி பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதையடுத்து பீடி இலை மற்றும் அவற்றை கொண்டு வந்த சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அட நான் தான்Jan 6, 2025 - 12:54:50 PM | Posted IP 172.7*****