» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!
திங்கள் 6, ஜனவரி 2025 3:13:25 PM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான தமிழர்களின் பாரம்பரிய கலைகளான வாழ்வீச்சு, சுருள்வாள் வீச்சு, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சிலம்ப கழகம் மற்றும் அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், திருவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 6 வயது முதல் 18 வயது வரை நடைபெற்றது.
இதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான வாழ் வீச்சு, சுருள் வாழ்வீச்சு, ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, தொடும் முறை, அலங்கார முறை உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது எங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் செய்திருந்தார்