» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா
சனி 4, ஜனவரி 2025 10:40:33 AM (IST)
சேர்வைக்காரன்மடத்தில் ரூ.39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் 15ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்து கட்டிடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி கல்வெட்டை திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஜெபஸ்டின் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலர் மாரியம்மாள் வரவேற்று பேசினார்.
விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகர், சேர்வைக்காரன்மடம் கிராம விவசாயிகள் அபிவிருத்தி சங்க தலைவர் தங்கதுரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா, கட்டாலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏசுவடியான், சேர்வைகாரன்மடம் வி.ஏ.ஒ. ஆனந்த், பஞ்சாயத்து உறுப்பினர்கள் சித்ரா, காளீஸ்வரி, கோபி, சகாயமேரி ஜான்சி, ஆனந்தராஜ், ஹேமா மேரி, குணபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்