» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்களை தேடி மருத்துவ முகாம்: மேயர் தகவல்
சனி 4, ஜனவரி 2025 11:14:47 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜன.4) மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் பாத்திமாநகர், மாதாகோவில் மண்டபம், தருவைரோடு, டூவிபுரம் 4வது தெரு, தபால் அலுவலகம் அருகில் ஆகிய பகுதிகளில் இன்று (ஜன.4) மாநகராட்சியுடன் இணைந்து மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளுமாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.