» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
2024ஆம் ஆண்டில் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது : எஸ்பி தகவல்!
புதன் 1, ஜனவரி 2025 10:46:07 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
கொலை குற்ற வழக்குகள் : (Murder Case)
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு (2024) காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.
அதன்படி கடந்த 2023 ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% கொலை வழக்குகள் குறைவாகவும், 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைவாகவும் பதிவாகியுள்ளது.
காய வழக்குகள் (Hurt Case):
மேலும் காயவழக்குகளில் இந்த ஆண்டுடன் கடந்த 2023 ம் வருடத்தை ஒப்பிடும்போது 2024ம் ஆண்டு 34% கொடுங்காய வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
போக்சோ வழக்கு தீர்ப்புகள் (Pocso Conviction):
அதே போன்று போக்சோ வழக்ககுகளில் தண்டனை விகிதம் கடந்த 2023 ஆண்டு 10% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 25% தீர்ப்புகள் அதிகரித்துள்ளது.
கொலை வழக்கு தீர்ப்புகள் (Murder Case Conviction):
தண்டனை விகிதம் கடந்த 2023 ஆண்டு 7% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 2024ம் ஆண்டு காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 50% ஆக தீர்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
ராம்Jan 1, 2025 - 04:41:22 PM | Posted IP 172.7*****
2004 ல் 72 கொலைசம்பவங்கள் கடந்த 2023ல் 69 கொலை சம்பவம் மட்டுமே காவல்துறை தவறான தகவல் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது. மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தை தொடர்பு கொள்ளவும்
ராம்Jan 1, 2025 - 04:42:35 PM | Posted IP 172.7*****