» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி மோதி ஒருவர் பலி!
புதன் 1, ஜனவரி 2025 12:51:40 PM (IST)
தூத்துக்குடியில் லாரி மோதி சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோடு, முடுக்கு காடு அருகில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் லாரியில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி நட்டார் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.