» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒட்டப்பிடாரத்தில் இலவச பொதுமருத்துவ முகாம்
ஞாயிறு 29, டிசம்பர் 2024 7:42:44 PM (IST)
ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கோவில்பட்டி, நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார் மைக்ரோ நிதி நிறுவனம், சார்பில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஒட்டப்பிடாரம் பஞ்.தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வி முன்னிலை வகித்தார்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மருத்துவ முகாமில் மருத்துவர் மகேஸ்வரன் மற்றும் செவிலியர்கள் மேரி, அன்னலட்சுமி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல் தலைவலி காது மூக்கு தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலமாக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பெட்காட் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் விஜயன், பெல் ஸ்டார் நிதி நிறுவனத்தின் மண்டல தலைமை அலுவலர் கார்த்திக், மண்டல மேலாளர் சுந்தர், ஒட்டப்பிடாரம் கிளை மேலாளர் கதிஷ் குமார், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஒட்டப்பிடாரம் வட்டார பயிற்றுநர் சுதா, பெல்ஸ்டார் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.