» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் சங்கருக்கு எஸ்பி ஆல்பர்ட ஜான் பாராட்டு
ஞாயிறு 29, டிசம்பர் 2024 7:07:12 PM (IST)
கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள போதைக்கு எதிரான குழுவினருக்கு பயிற்சி அளித்த எம்பவர் இந்தியா அமைப்பின் கெளரவ செயலாளர் சங்கருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதை பொருள் சம்பந்தப்பட்ட தகவலை காவல்துறைக்கு தெரிவிக்கவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய போதைக்கு எதிரான குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த அனைத்து கல்லூரி குழுவினருக்கும் தனியார் கல்லூரியில் வைத்து கடந்த 07.12.2024 ம் தேதி நடைபெற்ற பயிற்றுநர்களுக்கான பயிற்சி போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சியை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு.மூர்த்தி I.P.S அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினருக்கு எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தார்கள். அவரை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட ஜான் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.