» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் இயற்கை மருத்துவ முறை செயல்விளக்க பயிற்சி

சனி 28, டிசம்பர் 2024 9:38:00 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பனிக்கால இயற்கை மருத்துவமுறை செயல் விளக்க பயிற்சி நடந்தது.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவு சார்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கு பனி காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து இயற்கை மருத்துவ முறையில் பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கண்களை சுத்தப்படுத்தும் கண் குவளை, மூக்கை சுத்தப்படுத்தும் மூக்கு குவளை, கை கால் இடுப்பு வலி மாஸ்கரோல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் பனி காலங்களில் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து இயற்கை மருத்துவ முறை குறித்த செயல் விளக்கபயிற்சி அளித்தார். செவிலியர் ராஜேஸ்வரி யோகா பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி கணினி அறிவியல் துணைத் தலைவர் செல்வலட்சுமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory