» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
ஞாயிறு 22, டிசம்பர் 2024 9:00:54 PM (IST)
கோவில்பட்டி 31 வது வார்டு குழுமம் சார்பில் புனித ஓம் மெட்ரிக் பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இதில் எலும்பு முறிவு மருத்துவர் முத்து கிஷோர்,மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சுதா, தீபா,பல் மருத்துவர் பாக்ய மதிவாணன்,இருதய மருத்துவர் பாலமுருகன், தோல் மருத்துவர் நர்மதாதேவி, அறுவை சிகிச்சை சமுத்திர பாண்டியன், பிசியோதெரபிஸ்ட் சபரி லட்சுமி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இசிஜி, ரத்தம், உயர் அழுத்த பரிசோதனை, உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளை செய்தனர்.
மருத்துவர்கள் பரிந்துரை பேரில் மருந்துகளும் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில் 380க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை 31வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் சிறப்பாக செய்திருந்தார்.