» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது : பைக் பறிமுதல்!

ஞாயிறு 22, டிசம்பர் 2024 12:54:31 PM (IST)

நாலாட்டின்புதூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2பேரைை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகன்நாதன் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமையில் சார்பு ஆய்வாளர் செல்லதுரை மற்றும் போலீசார் நேற்று  முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் நாலாட்டின்புதூர், ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து (25) மற்றும் முடுக்குமீண்டான்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் முகேஷ்குமார் (24) என்பதும் அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory