» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல்மருவத்தூரில் தைப்பூச இருமுடி விழா: செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி பயணம்!
ஞாயிறு 22, டிசம்பர் 2024 5:18:19 PM (IST)
தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூருக்கு தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி புறப்பட்டனர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா டிசம்பர் 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூச இருமுடி விழாவில் கலந்துகொள்ள தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களில் இருந்து செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சிறப்பு வழிபாட்டை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார். சக்தி மாலை அணியும் நிகழ்ச்சியை கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். கோவில்பட்டி, தூத்துக்குடி, கழுகுமலை, விளாத்திகுளம், நாகலாபுரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், முத்துசாமிபுரம், எட்டையபுரம், பிள்ளையார்நத்தம், எம்.ஜி.ஆர். நகர் உட்பட மாவட்டம் முழுவதும் சக்தி மாலை அணிந்து வருகின்றனர்.
சக்தி மாலை இருமுடிகட்டிச் செல்லவிரும்பும் பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் / சக்தி பீடங்களை தொடர்புகொள்ளலாம். இருமுடி பக்தர்களின் வசதிக்காக அதிவேக இரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல தெற்கு இரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் பத்மாவதி, வேம்பு கிருஷ்ணன், கோபிநாத், தளவாய்புரம் முத்துராஜ், கோவில்பட்டி மன்ற பொறுப்பாளர்கள் ராஜலெட்சுமி, சக்திமாரிராஜ், கற்பகவள்ளி, ராதா, காசியம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.