» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா
ஞாயிறு 22, டிசம்பர் 2024 8:55:44 PM (IST)
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்லூரிஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்திரா நகரில் உள்ள சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்லூரிஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். இன்ஜினியர் சந்தனராஜ், ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நர்சிங் கல்லூரி முதல்வர் பொன் திலகவதி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா ஆண்டறிக்கை வாசித்தார் ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ், தன்னம்பிக்கை பேச்சாளர்பேராசிரியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்து பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
இதில் மகிழ்வோர்மன்ற நிர்வாகிகள் மோகன்ராஜ், வெள்ளைச்சாமி,உள்பட கோவில்பட்டி, பரமக்குடி, சொர்ணா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நர்சிங் கல்லூரி ஆசிரியை பூபதி நன்றி கூறினார்.