» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மெகா கேரல்ஸ்!
ஞாயிறு 22, டிசம்பர் 2024 5:15:53 PM (IST)
வெள்ளாளன்விளை தூய திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கங்களின் உறுப்பினர்கள் சுமார் 200 பேர் பங்கேற்ற மெகா கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ பாடல் மற்றும் இசையுடன் கேரல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை தூய திருத்துவ ஆலயத்தின் அனைத்து சங்க உறுப்பினர்கள் 200 பேர்கள் ஒன்றிணைந்து மெகா கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கு வெள்ளாளன்விளை சேகரத் தலைவர் குருவானவர் தாமஸ் ரவிகுமார் தலைமை தாங்கி ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சபை ஊழியர் ரூபன் இம்மானுவேல் கிராம நிர்வாகக் குழு தலைவர் ஹென்றி செயலாளர் சாமுவேல் ஞானப்பால் பொருளாளர் பேராசிரியர் சாமுவேல், சேகர செயலர் ஜெயராஜ், பொருளாளர் ஜெபராஜ்.பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஸ்மித் மன்னா பமிலா, ஜோன்ஸி செல்வ பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் ஐக்கிய சங்க செயலாளர் , , பெண்கள் ஐக்கிய சங்க செயலாளர் யோவன்னாள், வாலிப ஆண்கள் ஐக்கிய சங்க செயலாளர் வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம் ஞாயிறு பள்ளி செயலர் ஜெபரதி உட்பட பலர் கிறிஸ்துமஸ் சிறப்பு கேரல்ஸ் பாடல்களைப் பாடினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெள்ளாளன்விளை சேகரத் தலைவர் தலைமையில் ஆலய ஆர்கனிஸ்ட் சந்தோஷ் ஜோசப் ஆலய பாடகர்கள் கிதியோன், ஜேக்சன் மற்றும் திருச்சபை மக்கள் செய்திருந்தனர்.