» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா

ஞாயிறு 22, டிசம்பர் 2024 5:13:12 PM (IST)



நாசரேத், ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா நடைபெற்றது.

விழாவில் துவக்கத்தில் ஓய்வு பெற்ற குருவானவர் தேவராஜ் ஞானசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஆஷா ஜேம்ஸ் வேத பாடம் வாசித்தார். ஓய்.எம்.சி.ஏ தலைவர் எபனேசர் வரவேற்புரை வழங்கினார். தொழிலதிபர் கேர்சோம், ஓய்.எம்.சி.ஏ நெல்லை மண்டல துணை செயலர் பொன்ராஜ், மர்காஸ்சியஸ் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ரூபன் துரைசிங், மூக்குபீறி ஏக இரட்சகர் சபை தலைவர் மத்தேயு, பொறியாளர் ரஞ்சன் வாழ்த்துரை வழங்கினர்.

நாசரேத், தூய யோவான் பேராலய பெண்கள் பாடல் குழுவினர், மற்றும் ஓய்.எம்.சி.ஏ அங்கத்தினர் சிறப்பு பாடல்களை பாடினர். தொடர்ந்து நாசரேத் சேகர குருவானவர் அருட்திரு. ஹென்றி ஜீவானந்தம் கலந்து கொண்டு திருமறை பகுதியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குருவானவர் பொன் செல்வன் அசோக் குமார், பிரகாசபுரம் சேகர குரு நவராஜ், திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் மற்றும் நாசரேத் பேராலய உபதேசியார் ஜெபராஜ் ஜெசு செல்வன் கலந்து கொண்டனர்.

இதில் நாசரேத்தில் உள்ள நல்ல சமாரியன் மன நலம் குன்றியோர் இல்லம், திருமறையூர் காது கேளாதோர் பள்ளி, மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, கல்வாரி சேப்பல் டிரஸ்ட் ஆகிய மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஓய்.எம்.சி.ஏ நிர்வாகத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஓய்.எம்.சி.ஏ செயலர் சாமுவேல், ஆர்ம்ஸ்ட்ராங், புஷ்பராஜ், ஜட்சன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் லேவி அசோக் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory