» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து 10 பவுன் நகை, பணம் திருட்டு: 3 பேர் கைது

ஞாயிறு 22, டிசம்பர் 2024 9:18:54 AM (IST)

கயத்தாறில் வீடுபுகுந்து  10 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் திருடிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வடக்கு தெருவை சேர்ந்தவர் கோமதி தேவர் மனைவி சுப்புத்தாய் (70). இவர் கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் மூதாட்டி வீட்டில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்பலவாணர் தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் பொன்ராஜ், கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிவஞானம் மகன் சங்கரலிங்கம், தாழையூத்து பெருமாள் மகன் ஆறுமுகம் ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து நகை- பணத்தை மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory