» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பள்ளியில் கணினி அறிவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
சனி 21, டிசம்பர் 2024 8:39:04 PM (IST)
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ரத்தின ராஜா தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ், பள்ளி பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை வேலைவாய்ப்புகள் குறித்து கல்லூரி துறை தலைவர் செல்வலட்சுமி,உதவி பேராசிரியர் ஆதித்யன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இதில் கல்லூரி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பிளஸ் டூ கணினி அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு கணினி அறிவியல் வினா விடை புத்தகங்களை வழங்கி பேசினார். இதில் பள்ளி குழு உறுப்பினர்கள் வேல்முருகன்,சாமி ராஜன் உள்பட மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் அருணாசலம் நன்றி கூறினார்.