» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்பாப்திஸ்து துவக்கபள்ளியில் கிறிஸ்மஸ் விழா
சனி 21, டிசம்பர் 2024 3:21:56 PM (IST)
எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அகமது ஜலால்பைஜி, மேனாள் வருவாய் அலுவலர் பொன்.பரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியர் ஜோசப் ராஜா ஆசீர் வரவேற்றார். கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்து முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
இதில் மாணவர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் புணைந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பள்ளி முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் லட்சுமி அம்மாள், ஆசிரியர்கள் எப்சிபாய் முத்துராஜம், ஜானகி, ஜெயப்பிரியா, ஜான்சி ராணி,உள்பட பெற்றோர்கள் மாணவர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அன்புத்தாய் நன்றி கூறினார்.