» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி!
திங்கள் 30, டிசம்பர் 2024 5:37:10 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் நன்னீர் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பானது இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 22 பயிற்சியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வளவிரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, திருவைகுண்டம் டிவிஎஸ் சினிவாசன் சேவை மையத்துடன் இணைந்து, நடத்தியது.
தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) நீ. நீதிச்செல்வன் பயிற்சியை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நன்னீரில் வளர்க்கப்படும் மீன் இனங்கள், பண்ணை குட்டை உருவாக்குதல் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்புக்கான உபகரணங்கள், நன்னீர் மீன்வளர்ப்பில் நீர்த்தரமேலாண்மை, வர்த்தகம் மற்றும் சந்தைப் படுத்துதல் ஆகிய பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கோ. அருள் ஓளி ஒருங்கிணைத்தார். உதவிப் பேராசிரியர் பூ. மணிகண்டன், வெ. கோமதி மற்றும் ம.கீதா, ஆகியோர் பயிற்சி அளித்தனர்.