» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் நேரம் மாற்றம்: ஜனவரி 1 முதல் அமல்!
திங்கள் 30, டிசம்பர் 2024 5:09:38 PM (IST)
ஜனவரி 1ம் தேதியிலிருந்து திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் எண்கள் மற்றும் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயில்களின் புதிய எண்கள் மற்றும் நேர விவரம் வருமாறு:
வண்டி எண் 56728 நெல்லை செல்லும் பயணிகள் ரயில் காலை 7.10 மணிக்கு புறப்படும். வண்டி எண் 56004 நெல்லை செல்லும் ரயில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டும்.
வண்டி எண் 16732 பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 12.20 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56732 வாஞ்சிமணியாச்சி செல்லும் ரயில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56730 நெல்லை செல்லும் ரயில் மாலை 4.25 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56734 நெல்லை செல்லும் ரயில் மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 20606 சென்னை செல்லும் செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.40 மணிக்கு புறப்படுகிறது.
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பாசஞ்சர் ரயில்களின் புதிய எண்கள் மற்றும் புறப்படும் நேர விவரம் வருமாறு: வண்டி எண். 20605 செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4:20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
வண்டி எண் 56728 பயணிகள் ரயில் காலை 7.15 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56729 காலை 10.20 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56731 காலை 11.40 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 16731 பாலக்காடு- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56003 ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56733 ரயில் மாலை 6.50 மணிக்கு புறப்படும் என தென்னக இரயில்வே மதுரை மண்டலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.