» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நான்கு புதிய கிளைகள் திறப்பு விழா

திங்கள் 30, டிசம்பர் 2024 8:05:38 PM (IST)



தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நான்கு புதிய கிளைகள் துவரங்குறிச்சி, வாரணாசி, குறிச்சி, குரும்பபாளையம் ஆகிய ஊர்களில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது), பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

வங்கியின் 569, 570, 571 மற்றும் 572வது கிளைகள் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, உத்திரப்பிரதேசம் வாரணாசி, கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி மற்றும் குரும்பபாளையம் ஆகிய இடங்களில் ATM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது.


திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 569வது கிளையை தொழிலதிபர் Gani Sales உரிமையாளர் முகமது அப்துல் கனி திறந்து வைத்தார். உத்திரப்பிரதேசம் வாரணாசியில் 570வது கிளையை  MD & RAS பாலிடெக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்கே செளத்ரி திறந்து வைத்தார். 

கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் 571வது கிளையை COSIEMA இண்டஸ்ட்ரியல் பார்க் மற்றும் தலைவர், KGK குழும நிறுவனங்கள் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். குரும்பபாளையத்தில் 572வது கிளையை குமரன் மருத்துவ மையம் & குமரன் செவிலியர் கல்லூரி சேர்மன் துவக்கி வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல மேலாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.


புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உயர் சலீ எஸ். நாயர்  விளக்கியதாவது: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 569, 570, 571 மற்றும் 572 வது கிளைகளை துவரங்குறிச்சி திருச்சி மாவட்டம், வாரணாசி உத்திரப்பிரதேசம், குறிச்சி - கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் குரும்பபாளையம் - கோயம்புத்தூர் மாவட்டம் ஆகிய இடங்களில் ATM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது. 

மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 572 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.tmb.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory