» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பசுமை ஹைட்ரஜன் திட்டம் ஜனவரியில் நிறைவு பெறும்: வஉசி துறைமுக ஆணையம் தகவல்!
சனி 21, டிசம்பர் 2024 3:37:40 PM (IST)
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டமானது வரும் ஜனவரி 2025 முடிவடையும் என்று துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25 நிதியாண்டில், டிசம்பர் மாதம் 19-ம் நாள் வரை 29.70 மில்லியன் டன்களை கையாண்டு 1.87 சதவிகித வளர்ச்சியும், சரக்குபொட்டகங்களை பொருத்தவரையில் 5.62 இலட்சம் டிஇயுக்களையும் கையாண்டு 6.74 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரித்தல் மற்றும் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நேரத்தை குறைத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
சரக்குபெட்டக வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு வசதியாக வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3வது சரக்குபெட்டக முனையமான ஜே.எம். பக்ஸி போர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லிமிடேட் நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி இன்டர்நோஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் 14.20 மீட்டர் நீளமும் மற்றும் 370 அகலம் கொண்ட இம்முனையத்தை மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனாவால் அவர்களால் 16 செப்டம்பர் 2024 துவக்கி வைக்கப்பட்டது. இம்முனையத்தில் வருடத்திற்கு 6 இலட்சம் டிஇயு சரக்குப்பெட்டகங்களை கையாள முடியும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3-ஐ (NCB-3) ஆழப்படுத்தும் பணி பிப்ரவரி 2025 மாதம் முடிவடையும், அதேசமயம் துறைமுகத்திற்கு கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயிலை ஆழப்படுத்தும் பணி மற்றும் கப்பல் திரும்பும் சுற்றுபாதையினை (turning circle area of the Port) ஆழப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது,
இம்முனையத்தில் ஆழப்படுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் 100-120 டன் திறன் கொண்டு நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் (Harbour Mobile Cranes) வரும் ஜனவரி 2025 முடிவிற்குள் நிறவப்பட்டு இடைகால செயல்பாடுகள் துவக்கப்படும். வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை வெளியேற்றத்திற்கு வசதியாக JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வடக்கு சரக்கு தளம் -3 ஐ இயந்திரமயமாக்கும் திட்டமானது டிசம்பர் 2026 வருடத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக கப்பல் வரும் நுழைவு வாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணியானது ரூபாய் 15.24 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 49 மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கூடுதலாக பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் அடிப்படையில் தோராயமாக ரூபாய் 80 கோடியில் சரக்குதளம் 10 அமைக்கும் பணி மேற்கொள்ள பட உள்ளது. ஏற்கனவே 10.70 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இத்தளத்தினை வருங்காலத்தில் 14.50 மீட்டராக ஆழப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிலக்கரி தளம்-1 செயல்படாத நேரத்தில் தளத்தினை பயன்படுத்தும் நோக்கத்தில்இ நிலக்கரி தளம்-1-லிருந்து இணைப்பு கன்வேயர் நிலக்கரி சேமிப்புகிடங்கு வரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 13 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்களைக் கையாள முடியும்.
துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம்-2-ன் செயல்திறனை அதிகரிப்பதற்காகஇ அத்தளத்தில் ஒரு நாளுக்குஇ கூடுதலாக 25இ000 டன் சரக்குகளைக் கையாளும் நோக்கத்துடன்இ 100 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரம் ஜனவரி 2025 இரண்டாம் வாரத்தில் நிறுவப்பட உள்ளது. வடக்கு சரக்கு தளம்-2 மற்றும் வடக்கு சரக்கு தளம்-3 ஒவ்வொன்றிலும் தலா 5000 சதுர மீட்டர் நிலப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்படும். இப்பணியானது இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும்.
துறைமுகத்தின் எண்ணெய் தளத்தில் சுமார் 120 மீட்டர் நீளம் கொண்ட சிறிய கப்பல்களைக் கையாளுவதற்கு வசதியாக 2 mooring dolphin -கள் தேவையான உள்கட்டமைப்புகளுடன் 2025-ஆம் ஆண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்படும். தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் கடலோர காற்றாலைகள் அமையவிருக்கும் திட்டத்திற்கு உறுதுணையாக காற்றாலை இறகுகள் மற்றும் உபகரணங்களை கையாளுவதற்கான ஒரு பிரத்தியேகமான முனையத்தை நிறுவ துறைமுகம் திட்டமிட்டுள்ளது. இந்த முனையமானது 470 மீட்டர் நீளம் கொண்டதாகவும் 30 ஹெக்டேர்கள் சேமிப்பு பகுதியை உடையதாகவும் இருக்கும்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் இந்தியாவின் அமோனியா தயாரிக்கும் மையமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அமைவதற்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 501 ஏக்கர் நிலப்பரப்பினை 4 நிறுவனங்களுக்கு ஒதுக்கி ரூபாய் 41,860 கோடி மதிப்பில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி மற்றும் சேமிக்கும் வசதிகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் மின்சார உற்பத்தி நிறுவுதற்கான ஒரு முன்னோடி செயல்திட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது வரும் ஜனவரி 2025 முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதற்கு இணையாக துறைமுகம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பங்கரிங் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. பசுமை ஹைட்ரஜன் பங்கரிங் செயலாக்க திட்டம் விரைவில் முடிக்கிவிடப்பட உள்ளது. பசுமை ஹைட்ரஜன் / அமோனியாவை ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டன்களை கையாளுவதற்கு தேவையான சரக்குதள வசதி மற்றும் சரக்குகளை கையாளும் உள்கட்டமைப்பை நிறுவும் பணியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழு கவனம் செலுத்தி வருகிறது.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் தலைவர் சுசந்த குமார் புரோகித், கூறுகையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் பல்வேறு தனித்துவ சிறப்பம்சங்களான கிழக்கு மேற்கு சர்வதேச கடல்வழிதடத்திற்கு அருகாமையில் அமைந்திருத்தல, 24 x 7 செயல்பாடு, குறைந்த இயக்க விகிதம் 28.18 சதவிகிதம், குறைந்த நேரத்தில் துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்து செல்லுதல், சீர்மிகு இணைப்பு தளவாடங்கள், வரவிருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களின் மூலம் தென் இந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழும் என்று கூறினார்.