» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!!
சனி 21, டிசம்பர் 2024 3:59:58 PM (IST)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் இம்மாதம் முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கோட்டத்தில் 35 அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு சிறப்பு ஏற்பாடாக அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.