» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
என்னை அசத்திய சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு
சனி 21, டிசம்பர் 2024 8:29:00 PM (IST)
ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தினை சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். இவர்கள் பி சைட், சி சைட் போன்ற இடங்களைபார்வையிட்டனர்.
அவர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியத்தினை கண்டு களிக்க சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி மாணவர்கள் வருகை தந்தனர். இவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், வாஞ்சி நாதன் அவர்களின் பேரனும் எனது நண்பருமான வாங்கி கோபாலகிருஷ்ணன் என்னை கேட்டிருந்தார்.
நானும் அவர்களை காணுவதற்காக ஆதிச்சநல்லூர் சென்று இருந்தேன். அங்கே என்னை பார்த்தவுடன் மாணவர்கள் அனைவரும் என்னை பற்றி பல கேள்விகளைகேட்டனர். ஆச்சரியமாக இருந்தது. முதல் நாளே என்னைப்பற்றி இன்டர் நெட்டில் தேடி படித்து அறிந்து இருந்திருக்கிறார்கள். எனவே நான் எழுதிய நூல் எனது பேட்டி என, என்னை பற்றி நிறைய கேள்விகளை கேட்டார்கள். மிக சந்தோசமாக இருந்தது. எனவே அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் பற்றி பேச எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கூடுதலாக தாமிரபரணியை காப்பாற்ற வேண்டிய மாணவர்கள் கடமை என்பதை அவர்களிடம் உணர்த்துவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சைட் மியூசிய பொறுப்பாளர் அந்தோணி, ஆசிரியர்கள் மகாராணி, சொர்ண வள்ளி, சிநேகா, கிருஷ்டி மற்றும் வாய்ப்பு தந்த பள்ளி நிர்வாகம், முதல்வர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் உள்பட அனைவருக்கும் நன்றி. மாணவர்களுக்கு வாழ்த்துகள். உங்களால் தான் எதிர்காலத்தில் தமிழ்களின் பராம்பரியம் கட்டி காப்பாற்ற பட வேண்டும் என்றார்.
பள்ளி மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சைட் மியூசிய பொறுப்பாளர் அந்தோணி ஆசிரியர்கள் மகாராணி, சொர்ண வள்ளி, சிநேனா, கிருஷ்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.