» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு : எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவு!

சனி 21, டிசம்பர் 2024 7:44:52 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பினை மேம்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் எந்நேரமும் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வருபவர்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கட்டாயமான முறையில் சோதனை செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்குள் தேவையில்லாமல் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு வரும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கண்டிப்பாக ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்திற்கு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், அவ்வப்போது நீதிமன்றத்தின் உள்ளேயும் சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் எவரும் இருக்கின்றனரா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகங்களில் பின்புறமும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியினை மேம்படுத்த வேண்டும் என்றும், மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கும் காவல்துறையினரும் (BDDS) நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory