» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காசநோயாளிகளுக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள்

சனி 21, டிசம்பர் 2024 3:07:00 PM (IST)



வல்லநாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் - முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (21.12.2024) வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம்  தலைமையில் நடைபெற்றது.

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா  வரவேற்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் அ.கிருஷ்ண ஜோதி, சித்த மருத்துவ அலுவலர் ச.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவியர் சங்கத்தின் சார்பாக ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு சத்துணவை துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) க.சுந்தரலிங்கம்  வழங்கினார்.

நிகழ்ச்சயில் அவர் பேசுகையில், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு தொடர்ந்து எட்டாவது ஆண்டுகளாக சத்துணவை முன்னாள் பேராசிரியரான எஸ்தர் ராஜம் லயனல்  தலைமையிலான  சங்கத்தின் சார்பாக இன்று  ரூ.30,000/- மதிப்புள்ள சத்துணவு பொருட்களை 20 காசநோயாளிகளுக்கு வழங்கி உள்ளார்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் மாணவியர் சங்கத்திற்கு நன்றிகளையும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  காசநோயை ஒழிக்க அரசுத்துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் காசநோய் இல்லா இந்தியா உருவாகும் என கூறினார்.

மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் ச.குப்புசாமி,  நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், செல்லப்பா, சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் -  முன்னாள் மாணவியர்கள் சங்கம் ஆகியார்கள் இணைந்து  செய்திருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory