» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இளம்பகவத் ஆலோசனை
சனி 21, டிசம்பர் 2024 12:35:14 PM (IST)
தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கதை தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் இளம்பகவத் ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தை துவக்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.