» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அசல் ஆவணங்களை தொலைத்த வங்கி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

செவ்வாய் 3, டிசம்பர் 2024 7:55:12 PM (IST)

அடமானம் வைக்கப்பட்ட வீட்டின் அசல் ஆவணங்களை தொலைத்த வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி வேலம்மாள். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது வீட்டை அடமானம் வைத்து அப்பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 3 வட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு கடன் முழுவதும் கட்டி முடித்து விட்டார். இதன்படி வங்கியில் கொடுத்த தனது வீட்டிற்கான அசல் ஆவணங்களை கேட்ட போது, ஆவணங்களை காணவில்லை என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நெல்லை குறைதீர் ஆணையத்தில் வங்கி நிர்வாகத்திற்கு எதிராக வேலம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2022ம் ஆண்டு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கு விசாரணை நடந்து வந்தது, நுகர்வோர் ஆணைய தலைவர் திரு நீலபிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரித்தனர்கள். 

வழக்கில், வேலம்மாளின் வீட்டு அசல் ஆவணங்களை 2 மாததிற்குள் வழங்க வேண்டும். வழங்க முடியாத பட்சத்தில் அவருக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 2 லட்சம், வழக்கு செலவுக்கு 10 ஆயாரம் என மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory