» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
புதன் 4, டிசம்பர் 2024 11:07:12 AM (IST)
தூத்துக்குடியில் நாளை (டிச.5) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அய்யனார் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (டிச.5) வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக கீழமாப்பிள்ளையூரணி, ஜோதி நகர், திரேஷ் நகர், ஹவுசிங் போர்டு, குமரன் நகர், காமராஜ் நகர், டேவிஸ் புரம், ஜாகிர் உசேன் நகர், சுனாமி நகர், நேரு காலனி கிழக்கு, லூர்தம்மாள்புரம், தாளமுத்து நகர், ஆரோக்கியபுரம், சவேரியார்புரம், மாதா நகர், சிலுவை பட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்து கிருஷ்ணா புரம், அரசரடி, கீழ அரசரடி, தருவைகுளம் தளவாய்புரம், கோமஸ்புரம், பனையூர், ஆனந்த மாடன் பச்சேரி, மேல மருதூர், அ. குமாரபுரம், திரேஸ்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.