» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளால் வெட்டப்பட்ட அதிமுக நிர்வாகியை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆறுதல்!
புதன் 4, டிசம்பர் 2024 4:45:28 PM (IST)
தூத்துக்குடியில் அரிவாளால் வெட்டப்பட்ட அதிமுக நிர்வாகியை சந்தித்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடியில் அரிவாளால் வெட்டபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் தனராஜ்யை அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது வட்ட செயலாளர் அருண்குமார், அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல இணைச் செயலாளர் சங்கர், வட்ட பிரதிநிதிகள் அய்யப்பன், ஜோதிகா மாரி ஆகியோர் உடனிருந்தனர்.
சீ.அ.சுகுமாரன்Dec 4, 2024 - 06:48:17 PM | Posted IP 172.7*****