» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ல் சிட்டி சார்பில் வெள்ள நிவாரண உதவிகள்…!
புதன் 4, டிசம்பர் 2024 9:16:57 PM (IST)
கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ல் சிட்டி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியின் கோரிக்கை ஏற்ப கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை ரோட்டரி கிளப் ஆஃப் பியர்ல் சிட்டி தூத்துக்குடி வழங்கியுள்ளது. இதில் குடிதண்ணீர் ஒளி விளக்கு பிஸ்கட்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களை சங்கத்தின் தலைவர் ரொட்டேரியன் விக்னேஷ், விக்டர், இப்ராஹிம், கண்ணன், கார்த்திக், முனியசாமி, விஜய் ஹரிகிருஷ்ணன் மற்றும் முத்துராமன் ஆகியோர்கள் ஒருங்கிணைத்து தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.