» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மார்ச் மாதத்துக்குள் அனைத்து சாலைகளும் போடப்படும் : மேயர் தகவல்!

புதன் 4, டிசம்பர் 2024 12:31:53 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து சாலைகளும் போடப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்  ஆகியோர் ஆகியோர் முன்னிலையில்  நடந்தது. முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 

பின்னர் மேயர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இதுவரை நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 3052 மனுக்கள் பெறப்பட்டது 2500 மடத்திற்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. தூத்துக்குடியில் 206 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பூங்காக்களில் கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அதன்படி மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14 பூங்காக்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 4000 ரோடுகள் உள்ளனர் இதில் 2500 ரோடுகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் ஜனவரியில் தொடங்கும். வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரோடுகளும் புதிதாக போடப்படும் என்று மேயர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாநகர அலுவலர் டாக்டர் வினோத் குமார், ரங்கநாதன், துணை மாநகர பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கற்பகனி, பட்டுக்கனி, ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி, மார்க்கஸ், ரங்கசாமி, தேவேந்திரன், கீதா முருகேசன், பவானி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Ganesh,, தவெகDec 4, 2024 - 06:41:33 PM | Posted IP 172.7*****

வருங்கால முதல்வர் க்கு நல்ல ரோடா போடுங்க அண்ணே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory